தவல வடை

பருப்புகள், அரிசி, தேங்காய் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. பூண்டு சேர்க்கவில்லை. ஸ்ரீதர்க்கு பூண்டு வாசனை பிடிக்காது. பூண்டு விரும்பினால் அரைக்கும் பொது பூண்டு சேர்த்து அறைக்க. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. #Np3
தவல வடை
பருப்புகள், அரிசி, தேங்காய் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. பூண்டு சேர்க்கவில்லை. ஸ்ரீதர்க்கு பூண்டு வாசனை பிடிக்காது. பூண்டு விரும்பினால் அரைக்கும் பொது பூண்டு சேர்த்து அறைக்க. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. #Np3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்புக்களை (பயத்தம் பருப்பை தவிர) நிறைய நீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க. பயத்தம் பருப்பை தனியாக ஊறவைக்க ஊற வைத்த பொருட்களை களைந்து வடிக்க. பாதி பயத்தம் பருப்பை தனியாக எடுத்து வைக்க. மீதி ஊற வைத்த பொருட்களை பிளெண்டரில் இஞ்சி, மிளகாய், மிகவும் சிறிது நீர் சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் கொரகொரவென்று அரைக்க. கெட்டியாக இருக்க வேண்டும் வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போடுக., தனியாக எடுத்து வைத்த பயத்தம் பருப்பையும் இதில் சேர்க்க.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் 3 மேஜைகரண்டி எண்ணை சூடு செய்க. -1 நிமிடம். கடுகு பொறிக்க. பின் பெருங்காயப் பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி. கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க, 2 நிமிடங்கள். தேங்காய் துருவல் சிவக்க கூடாது இதை மாவுடன் சேர்க்க. மிளகு பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து சுத்தமான கையால் நன்றாக பிசைக. 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. பொரிப்பதற்க்கு முன்னால் மாவில் உப்பு சேர்க்க.
- 4
உள்ளங்கையில், சிறிது எண்ணை தடவி வடை தட்டுக நான் ஜல்லி கரண்டி மீது தட்டி எண்ணையில் சேர்ப்பேன். ½ அங்குலம் திக்காக இருக்கட்டும்
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் வடைகளை பொறிக்க. ஜல்லி கரண்டியால் வடைகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. உடைத்து பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் வடை மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும்.
10 வடைகள் செய்ய முடிந்தது. - 5
வடை புரதமும், உலோக சத்துக்களும் கொண்ட ஆரோக்யமான உணவு. சுவைத்து விருப்பமான சட்னி கூட பரிமாறுக. நான் தர்பூசி தோல் சட்னி, தேங்காய் சட்னி கூட
பரிமாறினேன்.
டிப்ஸ்: கடலெண்ணையின் smoking point 450F, 232C. உஷ்ணம் அதிகமானால் degrade ஆகாது. எண்ணை degrade ஆனால் உடல் நலத்திர்க்கு கேடு விளைவிக்கும் அதிக நெருப்பில் பொறிக்காதீர்கள், பொறித்தால் வடை வெளியே சிவந்து விடும், உள்ளே வேகாது. மிதமான நெருப்பில் பொறிக்க.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (5)