சாக்லேட் பணியாரம்

#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன்
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
போர்பன் பிஸ்கட் பிரித்து அதில் இருக்கும் கிரீமை தனியே எடுத்து பிஸ்கட் மட்டும் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- 2
உள்ளிருக்கும் க்ரீம் உடன் ஒரு சிறிய டைரி மில்க் சாக்லெட்டை சேர்த்துஉருண்டைகளாக சாக்லேட் உருண்டைகள் செய்யவும்.
- 3
ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி பிஸ்கட் கலவையை சிறிது சேர்த்து சாக்லேட் உருண்டை சேர்த்து மேலே திரும்பவும் பிஸ்கட் கலவையை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் கழித்து பணியாரம் திருப்புவது போல் திருப்பிப் எடுக்கலாம்.
- 4
சாக்லேட் பணியாரம் சாக்லேட் கேக் போல உள்ளிருக்கும் சாக்லேட் உருண்டைகள் உருகி சாக்லேட் லாவா போல இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்