காப்ஸிகம் மசாலா தோசை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்க்கவும்.
- 2
அதன்பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்பு காப்ஸிகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
அதன்பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி இலை மற்றும் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்
- 6
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
- 7
தேவையான அளவு எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் தெளித்து இரண்டு பக்கமும் வேக வைக்கவும்.
- 8
காப்ஸிகம் மசாலாவை தோசை நடுவில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் தெளித்து சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14864545






















கமெண்ட்