சைதாப்பேட்டை வடகறி
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊற வைத்த கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் சேர்த்து கரமொரவென அரைக்கவும்.
- 3
இதனுடன் கொத்தமல்லி இலை, கருவேப்பில்லை, கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
- 4
கடாயில் எண்ணெய் சூடான பின், சிறிது சிறிதாக தட்டி வடைகளை பொறித்து எடுக்கவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
- 6
பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பில்லை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
அதன் பின் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
பிறகு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 9
அதன் பின் கெட்டியான தேங்காய் பால் ஊற்றி மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பொறித்து எடுத்த வடைகளை உடைத்து கிரேவியில் சேர்க்கவும்.
- 10
கடாயை மூடி மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட்