பூரி மசால்

பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.
உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.
#Combo1
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.
உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.
#Combo1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு,ரவை,சர்க்கரை,உப்பு,
எண்ணெய் சேர்க்கவும். - 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மூடி வைக்கவும்.
- 3
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில்
வைத்து சூடானதும், மாவை எடுத்து உருட்டி பூரி மேக்கரில் வைத்து அழுத்தி காயும் எண்ணெயில் போடவும். - 4
பூரி நன்கு உப்பி வந்தவுடன் திருப்பிப் போட்டு இடுத்தால்்மிகவும் சுவையான பூரி தயார்.
- 5
உருளைக்கிழங்கு மசால் செய்ய:
உருளைக்கிழங்கை நன்கு கழுவி எடுத்து நறுக்கி தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும். - 6
மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.வெங்காயம், தக்காளி, இஞ்சி,பச்சை மிளகாய்,மல்லி இலை எல்லாம் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 7
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை, சோம்பு,கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். மஞசள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தண்ணீரை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 9
பின் ஒரு பௌலில் வேக வைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் உரித்து சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 10
அதன் பின் வதங்கும் வெங்காயம், தக்காளியுடன், உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து கலக்கவும்.
- 11
பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்து விடவும்.
- 12
இரண்டு நிமிடங்கள் கொதித்தவுடன் இறக்கினால்
சுவையான உருளைக்கிழக்கு மசால் தயார். - 13
இப்போது மிகவும் சுவையான பூரி உருளைக்கிழங்கு மசால் சுவைக்கத்தயார்.
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட் (9)