சாப்ட் இட்லி.

#combo - 1 Idly... இட்லி எல்லோருக்கும் தெரிஞ்ச, பிடித்தமான தினம் தினம் செய்யும் உணவு... என்னுடைய செய்முறை..
சாப்ட் இட்லி.
#combo - 1 Idly... இட்லி எல்லோருக்கும் தெரிஞ்ச, பிடித்தமான தினம் தினம் செய்யும் உணவு... என்னுடைய செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை நன்றாக கழுகி, களைந்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.
- 2
4மணி நேரத்துக்கு பிறகு கிரைண்டரில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி தெளிச்சு 15 - 20 நிமிடம் அரைத்துக்கவும். மாவு சாப்ட் பஞ்சுப்போலே இருக்கும், தண்ணீரில் கொஞ்சம் மாவை எடுத்து தண்ணீரில் போட்டு பாத்தால் மாவு மிதக்கும்..
- 3
உளுத்தம்பருப்பு வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு, கிரைண்டரில் அரிசியை போட்டு தேவையான தண்ணி விட்டு ரவை பதத்துக்கு அரைத்து கடைசியில் உப்பு போட்டு அரைத்து வழித்து உளுத்தம் மாவுடன் கலந்து நன்றாக கை போட்டு கரைத்து வைத்து விடவும்.8 மணி நேரம் மாவை புளிக்க விடவும், மாவு நன்கு பொங்கி இருக்கும்
- 4
நன்கு பொங்கின மாவை கரண்டியால் ரொம்ப கல க்காமல் மெதுவாக எடுத்து எண்ணை தடவிய இட்லி தட்டில் ஊற்றி இட்லி குக்கர் அல்லது கொப்பரையில் ஸ்டவ்வில் வைத்து 10 - 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்...
- 5
சுட சுட மல்லிகை பூ இட்லி தயார்.. அருமையான சுவையான சாப்ட் இட்லியை சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னி, மிளகாய் பொடியுடன் தொட்டு சாப்பிடவும்...
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்