காஞ்சிபுரம் மசாலா தோசை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு துருவிய காரட், பீட்ரூட், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
அதன் பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதக்கிய பின் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
அதன் பின் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 7
பின்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்கி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- 8
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் தெளித்து விடவும்.
- 9
பின்பு ஒரு ஸ்பூன் இட்லி பொடியை தூவி விட்டு மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் தெளித்து விடவும்.
- 10
தோசை மேல் காரட் பீட்ரூட் மசாலாவை பரப்பி வைத்து நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
- 11
மசாலா தோசை மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி விட்டு மேலும் ஒரு ஸ்பூன் நெய் தெளித்து சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes





























கமெண்ட்