எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋

#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.பின் 200 கிராம் அவலை தண்ணீர் தெளித்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 4
பின் அதனுடன்
2 வரமிளகாய், கறிவேப்பிலை,2 சிறிய பச்சை மிளகாய் சேர்க்கவும். - 5
பின் அடுப்பை சிம்மில் வைத்து முந்திரி பருப்பை அதனுடன் சேர்க்கவும். பின் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் வதக்கி விடவும்.
- 6
பின் அதனுடன் உப்பு சேர்த்து வதக்கி, பின் ஊற வைத்துள்ள 200 கிராம் அவலை கடாயில் போட்டு நன்கு கிளறி விடவும்.
- 7
கடாயில் அவலை நன்கு கிளறி விடவும்.பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
அருமையான சூப்பரான சுவை மிக்க இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா தயார்👌👌காலை உணவாக மிக விரைவில் தயார் செய்யலாம்.... வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍.நன்றி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)