பருப்பு குழம்பு👌👌

#pms family உடன் சேர்ந்து அருமையான சுவை மிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் விரும்பும் துவரம் பருப்பு குழம்பு செய்ய முதலில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு தக்காளி, 6 பீஸ் சிறிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பருப்பு மசிய வேக விடவும்.பின் மிக்சி ஜாரில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,வரமிளகாய், சிறிய வெங்காயம் 5 பீஸ் ,பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பருப்பு வெந்தவுடன்,பருப்பை நன்கு கடைந்து விடவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை ,உப்பு இரண்டையும் பருப்புடன் சேர்த்து நன்கு மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் பருப்பை தாளிக்க கடுகு உளுந்து,சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளிப்பை பருப்பு குழம்பில் போட்டு கலந்து விட்டு ,பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.நம் சுவையான பருப்பு குழம்பு தயார்👍👌

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.துவரம் பருப்பை கழுவி பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வேக வைக்கவும்.
- 2
அதனுடன் தக்காளி,5 பீஸ் சின்ன வெங்காயம்,மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் போட்டு நன்கு பருப்பு மசிய மூடி போட்டு வேக வைக்கவும்.
- 3
பருப்பு வெந்து கொண்டிருக்கும் போது நாம் தேங்காய் துருவல்,சீரகம் 1/2 டீஸ்பூன்,பூண்டு 5 பற்கள்,வரமிளகாய் 4,சிறிய வெங்காயம் 5 பீஸ் போட்டு மிக்ஸியில் நன்கு அரைத்துக் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பின் பருப்பு வெந்து விட்டதா என்று மூடியை நீக்கி பார்த்து நன்கு கடைந்து விடவும்.பருப்பை கடைந்து விட்ட பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதனுடன் சேர்க்கவும்.
- 5
கலவையை பருப்புடன் சேர்த்த உடன் நன்கு கலந்து விட்டு தேவையான அளவு உப்பு, தண்ணீர்,ஊற்றி பச்சை வாசனை போக மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 6
பருப்பு பச்சை வாசனை போனதும் மூடியை நீக்கி தாளிக்கவும்.பருப்பை தாளிக்க சிறிய கடாய் (அல்லது) தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்து,1/2 டீஸ்பூன் சீரகம் போட்டு பொறிந்தவுடன் கறிவேப்பிலை,2 வரமிளகாய் சேர்த்து தாளித்து விடவும்.
- 7
எண்ணெயில் நன்கு தாளித்தவுடன் அதை வெந்து கொடிருக்கும் பருப்பு குழம்பில் கொட்டவும்.பின் அனைத்தையும் நன்கு கலந்து விட்டு ஒரு கொதி விட்டு நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி மல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
நமது அருமையான சுவை மிக்க அனைவரும் விரும்பும் சூப்பரான துவரம் பருப்பு குழம்பு தயார்👌👌வீட்டில் உள்ள அனைவருக்கும் மதிய உணவாக பருப்பு குழம்பை பரிமாறி மகிழுங்கள்👍👍நன்றி😊😊
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)