தேங்காய் பால் குழம்பு

#PMS Family
இந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது.
தேங்காய் பால் குழம்பு
#PMS Family
இந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
அரை மூடி தேங்காயைத் துருவி முதல் பால் இரண்டாம் பால் என அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை பச்சை மிளகாய் தட்டிய பூண்டு பல் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை நறுக்கி வதக்கவும். பின்பு தேவையான காய்கறிகளை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும். வதங்கியதும் இரண்டாவது பாலை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 3
காய் நன்றாக வெந்ததும் முதல் பாலை சேர்த்து ஒரு கொதி விட்டு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் இப்போது சுவையான தேங்காய் பால் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்