மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)

#vattaram/week 5 / Madurai
*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் உடைத்த கடலை சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் புளி சேர்ந்து அரைக்கவும்.
- 2
இதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்ததும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 3
இதனை 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு நீர்க்க கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- 4
இதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து தண்ணி சட்னியுடன் கலந்து பரிமாறினால் சுவையான மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி தயார்.இதனை துணியில் அவித்த சூடான இட்லியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்