வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)

#bakingday
* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும்.
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday
* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயை சூடேற்றி அதனுள் உப்பு தூள் சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டாண்டு வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதன் மேல் ஒரு சல்லடை வைத்து கோதுமை மாவு சர்க்கரை தூள் பட்டைத்தூள் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்துகொள்ளவும். இப்பொழுது பேக்கிங் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவிக் கொள்ளவும்.
- 3
இதனுடன் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரித்து ப்ரீஹீட் செய்து உள்ள கடாயில் வைத்து மூடி போட்டு 45 முதல் 50 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.
- 4
இப்பொழுது இதனை ஆற வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)