வாழைக்காய் கபாப்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாழைக்காய் 4 உருளைக்கிழங்கை நறுக்கி கொள்ளவும் பிறகு குக்கரில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
- 2
குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக விடவும்
- 3
வெந்த பின் அதை நன்கு மசித்து ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு சிறிதளவு கொத்தமல்லி ஒரு பச்சை மிளகாய் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு அரை ஸ்பூன் மிளகு தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 6
ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் கால் ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும் இரண்டு ஸ்பூன் சோள மாவு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்
- 8
பின் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருண்டை வடிவத்தில் செய்து கொள்ளவும்
- 9
அதேபோல் நமக்கு பிடித்த வடிவத்திலும் செய்து கொள்ளலாம் பின் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசைக்கல்லில் செய்த வடிவங்களை போடவும. இருபுறமும் நன்கு வேகும் வரை வேக விடவும்.... சுவையான வாழைக்காய் கபாப் ரெடி..........
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட்
All your recipes are yummy and delicious. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊