கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)
#வட்டாரம்
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை எடுத்து ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி தட்டில் வைத்து 7 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
- 2
வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
- 3
தேங்காய் துருவலை நெய் விட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- 4
ஆவியில் வேகவைத்து எடுத்த மாவை ஆற வைத்து ஏலக்காய் தூள், சுக்கு தூள், வறுத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து சூடான வெல்ல தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
- 5
மாவை நன்கு பிசைந்ததும் கையால் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 6
உடலுக்கு நலம் தரும் கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15100759
















கமெண்ட்