சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும் வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்துக் கொள்ளவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் வைத்துக்கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை போடவும் இதனுடன் வெங்காயத்தை சேர்க்கவும் பொன்னிறமாக வந்தவுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்
- 3
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் தக்காளியை சேர்க்கவும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்
- 4
தக்காளி நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்க்கவும்
- 5
எல்லாத்தையும் கிளறிவிட்டு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 6
கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும் புதினாவை சேர்த்துக் கொள்ளவும்
- 7
குக்கரை மூடி வைத்து வேக வைக்கவும் மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும் கொத்தமல்லியை சிறுதுண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்
- 8
இப்பொழுது தக்காளி சாதம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட்