..குடல் குழம்பு
வயிற்றுப் புண்ணை தடுக்க வல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஆட்டுக்கு குடலை வாங்கிக் நன்றாக சுத்தம் செய்யவும். சூடான தண்ணீர் வைத்து கொதித்தவுடன் குடலை முன்புறம், பின்புறமாக பிரட்டி கொழுப்பு, தோல், அட்டை, கழுவி சுத்தம் செய்யவும்.
- 2
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும். குழம்பு வைப்பதற்கு அரைக்க தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் 10 பூண்டு பல், ஒரு பெரிய துண்டு இஞ்சி சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைக்கவும்.
- 4
அரை மூடி தேங்காய் துருவலை எடுத்துக்கொண்டு மிக்ஸி ஜாரில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். ஒரு உருண்டை புளியைக் தண்ணீரில் சேர்த்துக் கரைக்கவும்.
- 5
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். என்னை காய்ந்தவுடன்,
- 6
பட்டை, பூ, லவங்கம், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 7
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி அதோடு தக்காளி சேர்த்து வதக்கவும். பின் கழுவி வைத்த குடலை அதோடு சுருள சுருள வதக்கவும்.
- 8
அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து 3 ஸ்பூன் மிளகாய்த்தூள், 2ஸ்பூன் மல்லி தூள், சேர்த்து வதக்கவும்.
- 9
கரைத்து வைத்த புளியை அதில் ஊற்றவும். பின் தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வைக்கவும்.
- 10
அடுப்பை அனைத்து விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்த்து, ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். ருசியான குடல் குழம்பு ரெடி.🌹🌹🌹
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட்