முஸ்லிம் ஸ்டைல் கல்யாண ஃபீர்னி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். அரை லிட்டர் பாலாக மாறும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு அந்தப் பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த பிறகு ஒரு குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பிறகு ரவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 3
ரவை கெட்டியாக ஆரம்பிக்கும் பொழுது அதில் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ரவை வேகும் வரை நன்கு கிளற வேண்டும்.
- 4
அதன்பிறகு ரவை வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு சிறிதளவு ரவையை கையில் எடுத்து அமுக்கினால் அமுக்கும் அளவிற்க்கு இருக்க வேண்டும். இந்த நிலையில் முதலாவதாக காய்ச்சிய பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
ரவையுடன் பால் நன்கு சேர்ந்தபிறகு இரண்டாவதாக காய்ச்சிய பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 6
அதன் பிறகு சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும் கை விடாமல் சிறிது நேரம் கிளறி நாள் கெட்டியாக வரும் அந்த சமயத்தில் கேஸை ஆப் செய்துவிட வேண்டும். இவை அனைத்தையும் மிதமான தீயில் வைத்து செய்ய வேண்டும்.
- 7
இது பெரும்பாலும் இஸ்லாமியர்களின் வீடுகளில் பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய ஒருவகை பாயாசம் ஆகும். இது முக்கியமாக கல்யாண வீடுகளில் செய்யக்கூடிய ஒரு பாயாசம் இதை நீங்களும் வீட்டில் சமைத்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்