கரூர் எள்ளு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்,
- 2
பின் எல்லையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், என்பதற்கு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 5
பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
- 6
நன்கு கத்தரிக் காய் முருங்கைக் காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும், கொதித்தபின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்
- 7
சுவையான எள்ளு குழம்பு தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்