🌴வாழைப்பூ குழம்பு🌴
#banana
இந்த வாழைப்பூ குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.
🌴வாழைப்பூ குழம்பு🌴
#banana
இந்த வாழைப்பூ குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாழைப் பூவை 6 மடல் உறுத்து பூவில் நரம்பு எடுத்து, சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வாழைப்பூ அதில் போடவும். பின் குழம்பு வைக்க தேவையான பொருளை எடுத்து எலுமிச்சை அளவு புளி எடுத்து கொள்ளவும்.
- 2
அதில் தண்ணீரை ஊற்றி புளிக்கரைசல் எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காய்த் துருவல் எடுத்து அரை ஸ்பூன் சோம்பு போடவும்.
- 3
தேங்காய் விழுதை எடுத்துக்கொண்டு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அரை ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்.
- 4
அதோடு அரை ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு கருவேப்பிலை போட்டு தாளித்து இரண்டு பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 5
8 பூண்டு பல் சேர்த்து, 8 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், சேர்த்து வதக்கவும்.
- 7
புளிக்கரைசலை ஊற்றவும்.ஒரு கொதி வந்தவுடன் வாழைப்பூவை சேர்த்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றவும்.20 நிமிடம் அடுப்பை குறைவான தீயில் வைத்து குழம்பை கொதிக்க விடவும்.
- 8
பின் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும் சுவையான வாழைப்பூ குழம்பு ரெடி.🍌🍌🍌
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்