🌴வாழைப்பூ குழம்பு🌴

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#banana
இந்த வாழைப்பூ குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.

🌴வாழைப்பூ குழம்பு🌴

#banana
இந்த வாழைப்பூ குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1 வாழைப்பூ(6 மடல்)
  2. 1 தக்காளி
  3. 8 சின்ன வெங்காயம்
  4. 8 பூண்டுப்பல்
  5. தேவையான அளவு தண்ணீர்
  6. 2 பச்சை மிளகாய்
  7. சிறிதளவு கருவேப்பிலை
  8. 1 எலுமிச்சை அளவு புளி
  9. 1/4 மூடி தேங்காய்த் துருவல்
  10. தாளிக்க:
  11. அரை ஸ்பூன் சோம்பு
  12. அரை ஸ்பூன் வெந்தயம்
  13. தேவையான அளவு உப்பு
  14. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு வாழைப் பூவை 6 மடல் உறுத்து பூவில் நரம்பு எடுத்து, சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வாழைப்பூ அதில் போடவும். பின் குழம்பு வைக்க தேவையான பொருளை எடுத்து எலுமிச்சை அளவு புளி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அதில் தண்ணீரை ஊற்றி புளிக்கரைசல் எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காய்த் துருவல் எடுத்து அரை ஸ்பூன் சோம்பு போடவும்.

  3. 3

    தேங்காய் விழுதை எடுத்துக்கொண்டு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அரை ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்.

  4. 4

    அதோடு அரை ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு கருவேப்பிலை போட்டு தாளித்து இரண்டு பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  5. 5

    8 பூண்டு பல் சேர்த்து, 8 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், சேர்த்து வதக்கவும்.

  7. 7

    புளிக்கரைசலை ஊற்றவும்.ஒரு கொதி வந்தவுடன் வாழைப்பூவை சேர்த்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றவும்.20 நிமிடம் அடுப்பை குறைவான தீயில் வைத்து குழம்பை கொதிக்க விடவும்.

  8. 8

    பின் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும் சுவையான வாழைப்பூ குழம்பு ரெடி.🍌🍌🍌

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes