செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை

#banana
வாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம்
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#banana
வாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில வாழைப்பூவில் உள்ள நாரை எடுத்து சுத்தம் செய்து அதை ஒரு தண்ணீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்
- 2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு மிளகு பட்டை பொட்டுக்கடலை இஞ்சி பூண்டு கரம் மசாலா மிளகாய்த்தூள் சிறிது கருவப்பிள்ளை தேங்காய் பச்சை மிளகாய் இதை முதலில் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்
- 3
மசாலா அரைத்த பிறகு வெந்த வாழைப்பூவை போட்டு சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
பிறகு அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி சிறிது தேவைக்கேற்ப உப்பு சிறிது கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து கையால் நன்கு கலந்துவிட வேண்டும் சிறிது நீர் கோர்த்தல் போல் இருந்தால் சிறிது கடலை மாவை சேர்த்து கெட்டியாக உருண்டை பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
ஒரு வடை செட்டி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும் சுவையான வாழைப்பூ கோலா உருண்டை தயாராகிவிட்டது இது அசைவ சுவையில் மிகவும் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் நீங்களும் செய்து ருசித்துப் பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (2)