சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும். - 2
மிக்சியில் வரமிளகாய், சோம்பு சேர்த்து 1 சுற்று பல்சில் அரைக்கவும். பின்னர் அதனுடன் கடலை பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
அதனுடன் வாழைப்பூ சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
வாழைப்பூ கலவையுடன் வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு பிசிறி கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான வாழைப்பூ வடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15244182
















கமெண்ட்