பீர்க்கங்காய் கடையல்/ bottlegourd kadaiyal recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு வெங்காயம் தக்காளி எல்லாத்தையும் கட் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு கடுகு சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் தக்காளியை நன்றாக வதங்கிய பிறகு பீர்க்கங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்
- 4
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து
- 5
நன்றாக வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து
- 6
ஐந்து நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும் பிறகு ஒரு பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து இறக்கவும்
- 7
சுவையான பீர்கங்காய் கடையல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்