லாலிபாப் சிக்கன் / Chicken Lollipop Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் லாலிபாப் சிக்கன் துண்டுகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பௌலில் ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் அரை எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கலந்த மசாலாவில் லாலிபாப் துண்டுகளை நன்றாக பிரட்டி
- 4
மசாலா எல்லா பக்கமும் படும்படி நன்றாக தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு கோட் செய்வதற்கு மற்றொரு பௌலில் கால் கப் கார்ன்ஃப்ளார் கால் கப் மைதா சேர்த்து
- 5
ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முட்டை சேர்த்து
- 6
நன்றாக கலந்து அதில் ஊற வைத்த லாலிபாப் துண்டுகளை அதில் பிரட்டி எல்லா பக்கமும் படும்படி நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 7
பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகவைத்து எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 8
லாலிபாப் சிக்கன் தயார்
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்