சமோசா (samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும். காய்களை கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். பட்டாணி, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு மூன்றையும் கிளறி தண்ணீர் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எந்த ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு துருவல் போட்டு வதக்கவும்.பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட்டை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு மசாலா தூள்களை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
- 4
எல்லாம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி ஆறவைக்கவும்.பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து சமோசா சீட்களை ரெடி பண்ணிக் கொள்ளவும். பிறகு அந்த சீட்டில் மசாலாவை வைத்து சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் சுவையான சமோசா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்