"கேரட் அல்வா"(carrot halwa recipe in tamil)

"கேரட் அல்வா"(carrot halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் அல்வா செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
3/4கிலோ கேரட்-ஐ தோல் நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒவ்வொரு கேரட்டாக கிரேட்டரில் பூ போல் துறுவிக் கொள்ளவும்.
- 2
அடிகனமான பாத்திரத்தை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் வைத்து குறைந்த எண்ணில் வைக்கவும்.
50மில்லி நெய் ஊற்றிக் கொள்ளவும்.சூடான பிறகு10முந்திரி பருப்பை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்,15காய்ந்த திராட்சை இரண்டையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்...
- 3
அடுத்து அதே பாத்திரத்தில் 100மில்லி சன்பிளவர் ஆயில் ஊற்றிக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்த பிறகு 3/4கிலோ துறுவிய கேரட்-ஐ போட்டு 5-10நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும்...
1/2லிட்டர் ஆரோக்யா பால் பாக்கெட்-ஐ உடைத்து ஊற்றவும்...
- 4
அடுத்து பால் நன்றாக கொதித்து கேரட் வெந்த பிறகு.
300கிராம் ஜீனி(சர்க்கரை)சேர்த்துக் கொள்ளவும்(போட்டோவில் பாதி தவறியதற்கு மன்னிக்கவும்).
1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்,1சிறிய டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர் போடவும்.
- 5
அடுத்து சிறிது நேரம் நன்றாக கொதித்த பிறகு வறுத்து வைத்த முந்திரி பருப்பு,காய்ந்த திராட்சையை போட்டு கிளரவும்...
- 6
கேரட் அல்வா செய்யும் போது இடை இடையில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்....
அதிக தீயில் அல்லது அதிகம் எண்ணில் வைத்து செய்யும்போது அடிக்கடி கிளறிக் கொள்ளவும்.......
கேரட் அல்வா தயார்.......
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட் (2)