ரவை லட்டு(rava laddu recipe in tamil)

#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் ரவையை ஒரு பவுலில் போட்டு அதில் 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடம் மூடி போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
ஊறிய பிறகு ஒரு வாணலியில் 150 மில்லி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். தண்ணீர் சூடான பிறகு அதில் 100 கிராம் சர்க்கரையை சேர்த்து கொள்ளவும். சர்க்கரையை கிளறி விடக்கூடாது சர்க்கரை
தானாகவே கரைந்து வரும் வரை காத்திருக்கவும். - 3
சர்க்கரை கரைந்த பிறகு அதில் இடித்த 2 ஏலக்காய், ஒரு சிட்டிகை மஞ்சள் நிற கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
கலந்த பிறகு ஊறிய ரவையை சர்க்கரை தண்ணீரில் சேர்த்து கரண்டியால் மசித்து விடவும். நன்கு மசித்து விடாமல் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகள் இருக்கும் மாறு கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
- 5
குறிப்பு
ஆங்காங்கே கட்டிகள் இருப்பது போல் கிளறிக் கொள்ள வேண்டும். இப்படி கிளறினால் லட்டு சாப்பிடுவது போல் இருக்கும்.ஆங்காங்கே சிறுசிறு கட்டிகள் இருப்பதால் நீங்கள் முந்திரி திராட்சை எதுவும் சேர்க்கத் தேவையில்லை - 6
கட்டிகளை மசித்த பிறகு அது ஒரு அல்வா பதத்திற்கு வரும். அல்வா பதத்திற்கு வந்த பிறகு இரண்டு நிமிடத்தில் வாணலில் ஒட்டாத அளவுக்கு உருண்டு திரண்டு வரும்.அப்பொழுது அடுப்பை அணைத்து கொள்ளவும்.இது சரியான பதமாக இருக்கும். படம் 2 ல் உள்ளது போல் உருண்டு திரண்டு வரும்
- 7
அடுப்பை அணைத்த பிறகு அதை ஒரு பௌலில் போட்டு இரண்டு நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும்.ஆறியதும் லட்டு பிடித்து கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்