ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)

#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை.
ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)
#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி கழுவி வைக்கவும்.சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும். பிறகு நீளவாக்கில் சிறிது தடிமனாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். நீரை வடித்து ஆற விடவும்
- 2
ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு,அரிசி மாவும் கலந்து வைக்கவும். உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 3
எண்ணை காய்ந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து பொரிந்ததும் திருப்பி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து மொறுமொறுப்பாக எடுக்கவும்.
- 4
ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பரை போட்டு அதன் மீது வடித்து எடுக்கவும். சூடான பிரஞ்சு ஃப்ரை தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் என் பேரக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்