தலப்பாகட்டி மட்டன் பிரியாணி(thalapakatti mutton biryani recipev in tamil)

தலப்பாகட்டி மட்டன் பிரியாணி(thalapakatti mutton biryani recipev in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம்.
(மசாலா 1-ல் மழைக் காலம்,ஆதலால் சில நிமிடங்கள் வாணலியில் இட்டு பின் அரைத்தால்,அரைக்க எளிது.வறுக்கத் தேவை இல்லை.)
மசாலா1 மற்றும் மசாலா2-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தனித்தனியாக வைக்கவும்.
மிக்ஸி கழுவிய தண்ணீரைத் தனியாக வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை, நீளமாக அரிந்து, தயிர் மற்றும் உப்பு,மல்லித்தழை சேரத்து கலந்து கொள்ளவும்.
- 2
குக்கரில்,நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும்,மசாலா2 (வெங்காயம்,மிளகாய் அரைத்த விழுயது)சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 3
பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.வதங்கியதும், மிளகாய் தூள் மற்றும்,மசாலா1 மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.
- 4
இப்பொழுது மட்டன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும். சேர்த்து 7-10 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.நன்றாக வதக்கினால் தான் கவுச்சி வாசம் போகும்.
- 5
பின் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
3.5 கப் பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசிக்கு 7கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
சிக்கன்,மட்டன்
பிரியாணியாக இருந்தால் 1கப் குறைத்துக் கொள்ள வேண்டும். எனவே,6கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். - 6
இப்பொழுது,மிக்ஸி கழுவிய தண்ணீர் 1கப் சேர்த்து கொதித்ததும்,குக்கர் மூடி சிறுதீயில் வைத்து 5 விசில் விடகவேண்டும்.
இந்த சமயத்தில் தான் அரிசி கழுவி ஊற விட வேண்டும். அடுப்பை அனைக்கும் போது அரிசி தண்ணீர் வடிகட்டவேண்டும்.
மட்டன் குழம்புக்கு 6 விசில் வைப்பேன்.பிரியாணிக்கு 1விசில் குறைவாக வைக்கவும்.
விசில் விட்டு,ஆவி அடங்குவதற்கு,குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும்.
- 7
அல்லது
மட்டன் தனியாக(மட்டன் துண்டுகளை
குக்கரில் சேர்த்து அதனுடன்,2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1கப் தண்ணீர் விட்டு 5 விசில் வைக்கவும். வெந்ததும்,கிடைக்கும் தண்ணீரை அரிசி போட்டதும் ஊற்றும் தண்ணீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்)வேக வைத்து இந்த ஸ்டெப்பில் சேர்க்கவும்.
- 8
பின்,குக்கர் திறந்து மீதமுள்ள 5கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,ஊறவிட்டு வடிகட்டி வைத்த அரிசி சேர்க்க வேண்டும்.கொதித்ததும்,உப்புகாரம் சரிபார்த்து,எலுமிச்சை சாறு சேர்த்து வேக விடவும்.
- 9
10 நிமிடங்களில், அரைப் பததிற்கு மேல் வெந்துவிடும்.தண்ணீர் வற்றி,தண்ணீர் மற்றும் அரிசி சம அளவில் இருக்கும் போது நெய் மற்றும் சில புதினா இலைகள் தூவி தம் போடவும்.
- 10
சிறிய அடுப்பில்,தோசைக் கல் வைத்து அதன் மேல் குக்கர் வைத்து மூடி,அதன் மேல் கனமான பொருள் வைக்கவும்.
- 11
இந்நிலையில்,20 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.பின் அடுப்பை அணைத்து 15 நிமிடங்கள் அதிலேயே வைக்கவும்.
- 12
பின்,திறந்தால்பிரியாணி உதிரியாக வெந்து வந்திருக்கும்.
அவ்வளவு தான். சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- முட்டைகோஸ் பொரித்த கூட்டு(cabbage koottu recipe in tamil)
- தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்(masala rasam recipe in tamil)
- Simple உருளைகிழங்கு& பட்டாணிகூட்டு(peas potato koottu recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
- கிரீன் சிக்கன் வருவல் (Green chicken varuval recipe in tamil)



















கமெண்ட் (2)