சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)

#CF4 முட்டை பொரியல்.
இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.
இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த பிறகு அதை ஒரு தட்டில் மாற்றி வைத்து கொள்ளவும்.
- 3
மாற்றிய பிறகு, மற்றொரு பௌலில் 3 முட்டையை உடைத்து ஊற்றி,நன்கு கலந்து கொள்ளவும்.கலந்த பிறகு அதில் அரைத்த சீரகம் மிளகு மஞ்சள் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
அடுத்து, கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும்,அதில் தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பின் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம்,கறிவேப்பிலை, சிறிதளவு,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வதங்கிய பின்னர் கலந்து வைத்த முட்டை சீரக கலவையை ஊற்றி கொள்ளவும். ஊற்றிய பிறகு ஒரு நிமிடம் கழித்து கிளறி விடவும். கிளறி பிறகு ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கொள்ளவும்.
- 7
சுவையான சீரக முட்டை பொரியல் தயார்.கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
- வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
- தலைப்பு : தினை பாயசம்(thinai payasam recipe in tamil)






















கமெண்ட்