பஞ்சாப் மோர் குழம்பு, (Punjabi pakoda kadi recipe in tamil)

#CF5
மோர் குழம்பு மிகவும் சுவையானது அதேசமயம் வயற்றுக்கும், இதமானது.
இது ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு சுவையுடன் சமைக்கப்படுகிறது .அந்த வகையில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாப் மோர் குழம்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பஞ்சாப் மோர் குழம்பு, (Punjabi pakoda kadi recipe in tamil)
#CF5
மோர் குழம்பு மிகவும் சுவையானது அதேசமயம் வயற்றுக்கும், இதமானது.
இது ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு சுவையுடன் சமைக்கப்படுகிறது .அந்த வகையில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாப் மோர் குழம்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போன்றவற்றை நறுக்கி வைக்கவும்.
- 2
தயிருடன் 3 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக அடிக்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதனை ஒரு கடாயில் சேர்த்து தனியே வைக்கவும்.
- 3
குழம்பு
ஒரு கடாயில் எண்ணெய் சிறிதளவு விட்டு அதில் வரமிளகாய்,பெருங்காயம், வெந்தயம், சீரகம், கடுகு இவற்றை நன்கு பொரிய விடவும். பின்னர் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 4
இவை நன்கு வெந்த பின்பு நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி பூண்டு மற்றும் இஞ்சி பூண்டு விழுது. இவற்றை நன்கு வதக்கவும்,வதங்கியதும் காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிய தீயில்.....
- 5
வறுத்த மசாலாவை தனியாக உள்ள கடாயில் சேர்க்கவும்... இதனை நன்கு கலந்து கொள்ளவும் மிதமான தீயில் வைத்து.
- 6
மோர் குழம்பு கொதிக்கும் பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் உலர்ந்த வெந்தயக்கீரை சேர்த்து சிறிய தீயில் வைக்கவும்.
- 7
பக்கோடா:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய்,வெங்காயம் கருவேப்பிலை, கொத்தமல்லி விதை
- 8
இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 9
இவற்றைத் தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு போல பிசைந்து கொள்ளவும்,மிதமான சூடான எண்ணெயில்...
- 10
பக்கோடா பொரித்தெடுத்து சூடாகவே மோர் குழம்புடன் சேர்க்கவும்.... இதே போல மீதமுள்ள மாவையும் பொரித்து குழம்புடன் சேர்க்கவும்.
- 11
இறுதியாக அலங்கரிக்க சிறிதளவு எண்ணையில் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பொன்னிறமாக பொரித்து மோர் குழம்பின் மீது சேர்க்கவும்.
- 12
இது பார்க்கவே நம்மை சுண்டி இழுக்கும் அழகிலும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்....
Keywords
Similar Recipes
More Recipes






































கமெண்ட்