சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாம்பார் சாதம் செய்ய தேவையான அரிசி, பருப்புகளை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
நன்கு கழுவி பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
விருப்பப்பட்ட காய்கறிகளை எடுத்து நறுக்கி வசித்துக்கொள்ளவும்.
- 4
சாம்பார் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் கொஞ்சம் எண்ணை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 6
பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை குக்கரில் சேர்த்து ஐந்து கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
- 7
வேறு ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணை,
நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், சாம்பார் வெங்காயம்,கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கவும். - 8
அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்களில், கத்தரிக்காய் விட்டு விட்டு மற்ற காய்களை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 9
பின்னர் உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது சேர்க்கவும்.மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 10
விழுது சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து மேலும் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 11
வேககும் காய்கறி, மாசலாவில் வேக வைத்து வைத்துள்ள சாதம், பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும். கொஞ்சம் வேக விடவும்.
- 12
பின்பு அதில் புளி கரைசல் சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை மூடி வைக்கவும்.
- 13
அதன்பின் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கலந்து விடவும்.
- 14
பின்னர் வாணலியில் நெய் சேர்த்து கடுகு, சீரகம், வற்றல், முந்திரி வறுத்து சாம்பார் சாதத்தில் சேர்த்து கலந்து, நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் சாம்பார் சாதம் தயார்.
- 15
தயாரான சாதத்தை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து, மேலே கொஞ்சம் தாளிப்பு சேர்த்தால் சுவையான சாம்பார் சாதம் சுவைக்கத் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




































கமெண்ட் (9)