வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)

என் கணவரின் பிறந்தநாளுக்காக நான் செய்த ஆரோக்கியமான கேக்
இதில் கோதுமை, வெல்லம் மற்றும் நட்ஸ் கலந்து செய்து கொடுத்தேன் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.இந்த வருடத்தில் என் மனதிற்குப் பிடித்த உணவு.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி... #m2021

சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியவாறு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு அகலமான பாத்திரத்தில் நீ என்னை தயிர் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இதனுடன் வெல்லத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
இதனை மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்துக் கொண்டு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அதன்மேல் சல்லடை வைத்து கோதுமை மாவு கோக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா பட்டைத்தூள் சேர்த்து சலித்துக் கலந்து கொள்ளவும்.இது சிறிது கட்டியாக இருந்தால் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் கலந்து கொள்ளவும்.
- 3
இப்பொழுது கேக் செய்யும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்கு தடவி அதன் மேல் பட்டர் பேப்பர் போட்டு கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றிவும். நட்ஸ் டூட்டி ஃப்ரூட்டி மற்றும் பேரீச்சம்பழங்களை 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
இதனை கலந்துள்ள கலவைகள் நன்கு சேர்த்து கிளறி மீதமுள்ள நச்சுக்களை தூவி அலங்கரித்து கொள்ளவும். இப்பொழுது பிரிட் செய்துள்ள கடையில் உள்ளே வைத்து மூடி 45 முதல் 50 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேக விடவும்.
- 5
இப்பொழுது கேக் வெந்ததும் நன்கு ஆறவிட்டு பட்டர் பேப்பரை பிரித்து எடுத்தாள் சுவையான மற்றும் ஆரோக்கியமான வீட் ஜகரி நட்டி கேக் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்