சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்... அதன் பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்
- 3
சிக்கன் நிறம் மாறி வந்த பிறகு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 4
சிக்கன் நன்றாக வெந்த பிறகு அதிக தீயில் தண்ணீர் வற்றும் வரை வைக்கவும் தண்ணீர் சிறிது வற்றிய பிறகு இதில் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் தண்ணீர் சுண்டி வரும் பொழுது நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை தூவி ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்
- 5
சுவையான காரசாரமான சிக்கன் மிளகு கறி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15865095

















கமெண்ட் (3)