ட்ரை கலர் பனியாரம்(tri colour paniyaram recipe in tamil)

#tri தோசை மாவ கடைசியில பனியாரமா மாற்றுவது நிறைய வீட்ல நடக்கும்.. இப்படி ட்ரை கலர் பனியாரமா மாத்தினத்துக்கு முழு பொறுப்பு நம்ம குக்பேட் தாங்க😂😂....

சமையல் குறிப்புகள்
- 1
தாளிக்க கொடுத்த பொருளை போட்டு தாளிச்சு, வெங்காயத்த போட்டு வதக்கனும்.. வெங்காய வதங்கின உடனே மாவுல கொட்டினா பனியார மாவு தயார்...
- 2
ஆரஞ்சு நிறத்துக்கு, கேரட் பொடியும் அரைச்ச கொஞ்ச கேரட் paste ம் போட்டேங்க...
பச்சை நிறத்துக்கு கருவேப்பிலை பொடி போட்டேங்க (உண்மைய சொல்லனும்ல பச்சை பனியார சுவை பிடிக்கல)... ஒருவேளை கொத்தமல்லி அரைச்சு ஊத்தி இருக்கலாமோ என்னவோ..
சாதா மாவுல வெள்ளை பனியாரம் செஞ்சாச்சு
- 3
நமக்கு மூனு நிற பனியாரம் கிடைச்சுடும்.... ரோட்டு சைட் தக்காளி சட்னி அட்டகாசமான காம்பினேசனா இருக்கும்....
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க...
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்