இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

அரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது.
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
அரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பை சுத்தம் பண்ணி, தேவையானதண்ணீர்விட்டுமஞ்சள்பொடி போட்டு வேகவைக்கவும்.
- 2
கொஞ்சம் வெந்தயம், பெருங்காயம் சேர்த்து லேசாக கொதித்ததும் குக்கரை மூடவும்.
- 3
குக்கரை மூடியதும் 2 விசில்வந்ததும் சிம்மில் 3நிமிடங்கள் வைக்கவும்.இப்போது காய்கறிகள், வெங்காயம் ரெடி பண்ணிக்கொள்ளவும்.அரைத்த சாம்பார் மசாலா எடுத்துவைக்கவும்.
- 4
புளியை வெந்நீரில் நனையப்போடவும்.பின்ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய்ஊற்றவும்.
- 5
அதில் கடுகு,உளுந்தம்பருப்பு,வெங்காயம் பச்சைமிளகாய்,கருவேப்பிலைபோட்டு தாளிக்கவும்.பின் காய்களைப்போடவும்.பின் அரைத்த மிளகாய்,உப்புசேர்க்கவும்.
- 6
பின் வடிகட்டியபுளிக் கரைசல் சேர்க்கவும்.பின் லேசாககொதிக்க விடவும்.
- 7
பின் கொதித்த காய்கறிகலவையைபருப்பில் சேர்க்கவும்.குக்கரை 2நிமிடங்கள் மூடி காய்கள் வேகவிடவும்.
- 8
பின்குக்கரை திறந்து மல்லித்தழை போடவும். சாம்பாரை வேறு பாத்திரத்தில் மாற்றிவிடவும்.மேலே லேசாக மல்லித்தூவி இட்லி,தோசைக்கு. பரிமாறவும்.இட்லி சாம்பார்ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்