பப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)

பப்பாளி பழம் உடலுக்கு நல்லது அதேபோல் பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது சத்தானது.. சுவையானது ...இது என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் ...

சமையல் குறிப்புகள்
- 1
ரொம்ப பிஞ்சும் இல்லாமல் பழுத்தும் இல்லாமல் நடுத்தரமான முற்றிய பப்பாளிக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.
- 2
பப்பாளிக்காயை தோல் சீவி அதனுள் இருக்கும் விதையை எடுத்துவிட்டு பொரியல் செய்யுமளவிற்கு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி விடவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் அதனுள்பொடியாக நறுக்கிய பப்பாளிக்காயை போட்டு நன்றாக வதக்கி விடவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அளவாகத் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 5
பப்பாளிக் காய் நன்றாக வெந்ததும் தேங்காய் பூ 3 ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்