தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி...
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி...
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
சிக்கனை கழுவி, சிக்கனில் இருந்து தண்ணீர் நன்றாக வடித்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இருந்தால் ஊற வைக்கும் பொழுது மசாலா ஒட்டாது.
- 3
கொடுக்கப்பட்ட மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ள வேண்டும்.
- 4
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மசாலாவை எடுத்து சிக்கன் துண்டுகளின் மீது தடவ வேண்டும்.
- 5
மசாலா தடவிய சிக்கனையும், மீதியிருக்கும் மசாலாவை ஒரு பாத்திரத்திலும் வைத்து, பிரிட்ஜில் 2மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- 6
பின்பு பொரிப்பதற்கு முன் எடுத்து,மீதி இருந்த மசாலாவையும் சிக்கன் துண்டுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம்.
- 7
அடுப்பை சிம்மில் வைத்து,அடி கனமான பாத்திரத்தில் 1/4கப் எண்ணெய் ஊற்றி அதில் 2 சிக்கன் துண்டுகள், வைத்து மூடி போட்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றி விட்டு வேக வைக்கவும்.
- 8
உடனே திருப்பி விட்டால் மசாலா உதிர்ந்து விடும். இரண்டு புறங்களிலும் நன்றாக சிக்கன் வேகும் வரை மாற்றி,மாற்றி போட்டு பொரிக்கவும்.
கரண்டியால்,நடுவில் நன்றாக அழுத்தி விடவும்.
- 9
இடுக்கின் உதவிகொண்டு ஓரங்களில் பொரிக்க வேண்டும்.
- 10
இவ்வாறு சிக்கனை பொரிப்பதற்கு, குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும்.
- 11
பொரித்து முடித்ததும், கடாயில் இருக்கும் கரிந்த மசாலாக்களை அப்புறப்படுத்திவிட்டு, மீதி இருக்கும் எண்ணெய் சேர்த்து, இதேபோல் மீதி இருக்கும் துண்டுகளையும் பொரித்து எடுக்கவும்.
- 12
3சிரட்டை துண்டுகளை, ஸ்டவ் சிறிய பர்னரில் மீடியம் தீயில் வைத்து எரித்து,தணல் கொண்டுவர வேண்டும்.
- 13
பின்பு,வேறு கடாயில்,பொரித்த துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி நடுவில் ஒரு சிறிய பாத்திரத்தில்,தணல் கரித்துண்டுகளை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மூடி போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும்.
- 14
இவ்வாறு வைக்கும் பொழுது நமக்கு smoky flavour கிடைக்கும்.சாப்பிடும்பொழுது சுவையாக இருக்கும்.
- 15
அவ்வளவுதான். சுவையான,ஓவன் இல்லாமல் செய்த தந்தூரி சிக்கன் ரெடி.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
- பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
- கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)
- பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
- ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
கமெண்ட்