பாப்புட்டு(paapputtu recipe in tamil)

Gowri's kitchen @gowri_8292
கூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
பாப்புட்டு(paapputtu recipe in tamil)
கூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தவும்
- 2
அரிசி ஈரம் பதம் பற்றிய உடன் மிக்ஸி ஜாரில் இட்டு பெரிய ரவை போல் திருத்திக் கொள்ளவும்
- 3
இதனுடன் உப்பு சர்க்கரை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 4
ஒரு சிறிய கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்
- 5
பாபுட்டு வேகவைக்கும் தட்டில் எண்ணெய் தடவி அதில் கலந்து வைத்த கலவையை ஊற்றவும்.
- 6
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் தயாராக வைத்துள்ள தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 25 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான கூர்க் ஸ்பெஷல் பாபுட்டு தயார்😋😋😋
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16400747


















கமெண்ட் (5)