சிக்கன் நுக்கெட்ஸ்(chicken noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்
- 2
சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது சோயா சாஸ் சில்லி ஃப்ளேக்ஸ் உப்பு மிளகுத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
மையாக அறைக்க தேவை இல்லை. அரைத்து சிக்கனை பிரட் உடன் சேர்த்து நன்றாக பிசையவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும் கையால் நன்றாக பரப்பி விடவும் சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
முட்டையுடன் உப்பு மிளகு தூள் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். ஒரு தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி கொள்ளவும். இப்பொழுது சிக்கன் துண்டுகளை முட்டையில் முக்கி எடுக்கவும்
- 5
முட்டையில் முக்கிய சிக்கன் துண்டுகளை பிரட் கிரம்சில் நன்றாக பிரட்டவும். என்னை நன்றாக காய்ந்தவுடன் சிக்கனை பொரித்து எடுக்கவும்
சுவையான மொறுமொறுப்பான சிக்கன் நக்கட்ஸ் ரெடி சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468010







கமெண்ட்