ஸ்ட்ரீட் ஸ்டைல் நூடுல்ஸ் (Street style noodles recipe in tamil)
ஸ்ட்ரீட் ஸ்டைல் நூடுல்ஸ் (Street style noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும் இதில் உப்பு ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து கொள்ளவும் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி மாவை பிசைந்து மூடி போட்டு அரைமணி நேரம் வைக்கவும். தயார் செய்த மாவை நான்காக பிரித்து உருண்டைகள் பிடித்து பாஸ்தா மெஷினில் விட்டு விரித்து எடுக்கவும். அதன் பின் பாஸ்தா மெஷினில் உள்ள கட்டரில் வைத்து நூடுல்ஸ்களாக கட் செய்யவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் இதில் நறுக்கிய தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 3
அதன்பின் பாஸ்தா மசாலாவை சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பின் தயார் செய்த நூடுல்ஸ்களை சேர்த்து இரண்டு நிமிடம் கிளற கூடாது. அதன் பின் தீயை குறைத்து லேசாக கிளறி விட்டு நூடுல்ஸ் வெந்தவுடன் சற்று சூப்பி நூடுல்ஸ் பதத்தில் அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்