தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
#Thechefstory #ATW2
சென்னை வாசிகளுக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு மிகவும் பிரபலமான ட்ரிப்ளிகேனில் இருக்கக்கூடிய பாட்ஷா அல்வா வாலா கடையில் சிக்னேச்சர் டிஷ் ஆன தம் ரூட் அல்வா ரெசிபியை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.
தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
#Thechefstory #ATW2
சென்னை வாசிகளுக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு மிகவும் பிரபலமான ட்ரிப்ளிகேனில் இருக்கக்கூடிய பாட்ஷா அல்வா வாலா கடையில் சிக்னேச்சர் டிஷ் ஆன தம் ரூட் அல்வா ரெசிபியை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை ரவையுடன் பால் சேர்த்து கலந்து வைக்கவும். மிக்ஸியில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் அரைக்கவும். அதோடு கோவா நெய் சேர்த்து கட்டிகள் இல்லாமல் அரைத்து எடுக்கவும்.
- 2
ஒரு அடி கனமான மற்றும் தட்டையான அகலமான பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றவும். இதில் ஏலக்காய் தூள் உப்பு மற்றும் ஃபுட் கலரை ஒரு மேஜை கரண்டி தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இதில் ஊற வைத்த ரவையை பாலுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
அடுப்பின் மேல் கனமான தோசை கல்லை வைத்து அடுப்பை ஆன் செய்து ஐந்து நிமிடங்கள் கல்லை சூடாக்கவும். சூடான கல்லில் தயார் செய்துள்ள இந்த கலவையை அந்த பாத்திரத்தோடு வைக்கவும். இப்பொழுது தீயை குறைத்து மூடி போட்டு அரை மணி நேரம் திறக்காமல் அப்படியே வேக விடவும். அதன்பின் திறந்து அடியிலிருந்து கிளறி விடவும் மேல் பக்கம் தண்ணீராகவும் கீழே கொஞ்சம் வேக ஆரம்பிக்கும்.
- 4
மீண்டும் பாத்திரத்தை மூடி நீங்களும் அரை மணி நேரம் சமைக்கவும். இப்பொழுது நடுவில் இரண்டு அல்லது மூன்று முறை திறந்து கிளற வேண்டும் இல்லை என்றால் அடி பிடிக்கும். இன்னும் கொஞ்சம் கெட்டியான பதத்தில் வந்திருக்கும்.
- 5
மீண்டும் பாத்திரத்தை மூடி இதே போல் மற்றொரு 40 நிமிடங்கள் தம் செய்யவும். இந்த முறையும் இடையில் சிறிது நேரத்திற்கு ஒரு முறை கிளற வேண்டும். இப்பொழுது நன்றாக வெந்து கெட்டியான பதத்தில் வந்திருக்கும் மேல்பக்கம் சமப்படுத்தி அதன் மேல் வெள்ளரி விதையை தூவவும் அடுப்பை அணைத்து மேலே சாதாரண அலுமினியம் மூடியை காற்று போகாதபடி மூடவும் இப்போது அடுப்புக்கரி கங்கு தயார் செய்து தட்டின் மேல் வைக்கவும். இதனை அரை மணி நேரம் அப்படியே விடவும்.
- 6
இப்பொழுது அடுப்பில் இருந்து எடுத்து மூடியை திறக்கவும் மேல் பக்கம் லேசாக கருகினார் போல் இருக்கும் ஆனால் இந்த அல்வாவின் ஸ்பெஷல் இந்த நிறம் தான். சாப்பிடவும் சுவையாக இருக்கும். இப்போது இதனை பரிமாறலாம்.
- 7
இதனை துண்டுகளாகி பரிமாறுவதை விட அப்படியே கரண்டியில் எடுத்து பரிமாறுவது பாரம்பரியமாக பரிமாறும் விதமாகும். வாயில் வைத்தால் கரையக்கூடிய அசத்தலான தம் ரோட் கா அல்வா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்