குதிரைவாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)

குதிரைவாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பூண்டை இரண்டாக நறுக்கவும். காய்கறிகளை தேவையான அளவில் வெட்டிக் கொள்ளவும். விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் சூடு ஏறியதும் கடுகு கருவேப்பிலை சீரகம், மிளகு, நிலக்கடலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் கூடவே இரண்டாக நறுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் இவற்றை சேர்க்கவும்.
- 3
பூண்டு வெங்காயம் வதங்கிய பின் நறுக்கிய தக்காளி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் கொஞ்சமாக உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும் கூடவே கழுவிய குதிரைவாலி அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 4
கடைசியாக தண்ணீர் வைத்து சாம்பார் தூள் சேர்த்து மூடி போட்டு குக்கரில் ஆவி வந்தபின் விசில் போட்டு சிறு தீயில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட் (4)