கார்த்திகை பொரி(pori urundai recipe in tamil)

கார்த்திகை பொரி(pori urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை கீரி குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பேனில் எள் சேர்த்து வறுக்கவும். எள் நன்கு பொரிய வேண்டும்.
- 3
அதே பேனில் 1/2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தேங்காயை சேர்த்து, வதக்கவும். ளோபிலேமில் வைத்து லைட்டா சிவக்கும் வரை வதக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் வறுத்த எள், தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்துடன் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். இதில் பாகு பதம் ரொம்ப முக்கியம். ஒரு தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பாகை விட்டால், பாகு உடனே கல்கண்டு மாதிரி ஆகவேண்டும். உடனே ஸ்டவ்வை ஆஃப் செய்து விட வேண்டும். இல்லை என்றால் பாகு கருகி விடும்.
- 6
இதை கலந்து வைத்த பொரியில் ஊற்றி நன்கு மிக்ஸ் பண்ணவும். உடனே உருண்டை பிடிக்கவும். உருண்டை பிடிக்கும் போதே கெட்டியாகி விட்டால் அப்படி ஸ்டவ்வில் ஸ்லோ பிளேமில் வைத்தால் இலகும். உருண்டை பிடிக்கலாம். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்