பரோட்டா(parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா உடன் உப்பு பேக்கிங் பவுடர் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் உருக்கிய வனஸ்பதி சேர்த்து நன்கு பிசிறி விடவும் பின் சூடான பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும் பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 3
பின் அதன் மேல் எண்ணெய் தடவி இரண்டு மணிநேரம் வரை ஊறவிடவும் பின் நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
பின் சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி மேலே எண்ணெய் தடவி ஈரத்துணி கொண்டு சுற்றி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வரமாவில் புரட்டி மெல்லியதாக தேய்க்கவும் பின் இதை புடவை கொசுவம் போல் சுருட்டி கொள்ளவும்
- 5
பின் இதை மிகவும் அழுத்தம் கொடுக்காமல் மிருதுவாக தேய்த்து கொள்ளவும்
- 6
பின்சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் சுட்டெடுக்கவும் சுவையான ஆரோக்கியமான பரோட்டா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16688727






















கமெண்ட்