தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிலோ அளவு பழுத்த தக்காளியை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளவும் பிறகு தண்ணீரை வடித்து விட்டு காய்ந்த துணியில் துடைத்து எடுத்து வைக்கவும். இந்த தக்காளியை நான்காக அறிந்து குக்கரில் போட்டு அதில் தேவையான கல்லுப்பு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி பத்திலிருந்து 11 சவுண்ட் விசில் விடவும். தக்காளி நன்கு வெந்து கொள்ளும்
- 2
ஒரு அடி கனமான அகன்ற வாணலியில் கால் கப் ஆயில் விட்டு காய்ந்தவுடன் அதில் கருவேப்பிலை கடுகு தாளித்துக் கொள்ளவும். இதில் வேக வைத்த தக்காளியை போட்டு தண்ணீர் சுண்டும் வரை மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
- 3
இதற்கிடையில் வெந்தயத்தை சிவக்க வாசம் வர வறுத்துக் கொள்ளவும். கருக விட்டு விட வேண்டாம். இதை ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
தண்ணீர் தக்காளியில் நன்றாக சுண்டிய பிறகு வர மிளகாய் தூளை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும். 5 நிமிடம் பச்சை வாசம் போக மிளகாய் தூள் தக்காளியுடன் கலந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். பிறகு வெந்தய பொடியை உங்களது சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். மீதி வெந்தய பொடி இருந்தால் வேறு குழம்புகளுக்கு கூட சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் வர மிளகாய் தூள் எண்ணெய் அதிகம் சேர்க்கும் வரை சீக்கிரம் கெடாது.
- 5
கடைசியாக நல்லெண்ணெய் தொக்கில் சேர்த்து கலந்து விடவும். இப்போது சுவையான தக்காளி தொக்கு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்