ஹனி கேக்(honey cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டர் உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும் பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 2
வெண்ணெய் சர்க்கரை மில்க்மெயின்ட் மூன்றையும் சேர்ந்த கலவையை க்ரீமியான பதத்திற்கு வரும் வரை 10 நிமிடங்கள் வரை நன்கு பீட் செய்யவும்
- 3
பின் மைதா உடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து ஜலித்து கொள்ளவும் பின் மைதா கலவை சிறிது சிறிதாக தூவி நன்கு கலந்து கொள்ளவும் இடையிடையே சூடான பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும் பின் நன்கு எல்லா சைடும் தட்டி கொள்ளவும்
- 5
பின் 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் வரை சூடான ஓவனில் வைத்து 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 6
பின் பத்து நிமிடம் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து அரைமணிநேரம் வரை ஆறவிடவும் பின் கேக் முழுவதும் குச்சியால் துளை போடவும்
- 7
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும் பின் இறக்கி ரோஸ் எசென்ஸ் கலந்து ஆறவிட்டா சுகர் சிரப் ரெடி பின் சிறிது சிறிதாக கேக் மேல் ஊற்றவும் ஜாம் உடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஒரு கொதி விடவும் ஜாம் கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கி இளம் சூட்டில் கேக் மேல் ஊற்றவும் பின் ஒரு மணி நேரம் வரை செட் ஆக விடவும்
- 8
சுவையான ஆரோக்கியமான ஹனி கேக் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes




























கமெண்ட்