பிரண்டை தொக்கு(pirandai thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை சுத்தம் செய்து தோல் சீவி கழுவி சுத்தமான துணியால் துடைத்து கொள்ளவும் பின் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் கூட பிரண்டையை சேர்த்து வதக்கவும் பின் வரமிளகாய் காஷ்மீர் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 2
காஷ்மீர் மிளகாய் வற்றல் சேர்த்து செய்யும் போது கலர் நல்ல ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் இருக்கும் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் பின் கரைத்த புளிக்கரைசல் விட்டு நன்றாக கிளறி விடவும் பின் மிதமான தீயில் கைவிடாமல் வதக்கவும்
- 3
பின் வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்
- 4
பின் எண்ணெய் பிரிந்து வரும் போது தாளித்த எண்ணெய் கலவையை ஊற்றி நன்கு கிளறவும் பின் நன்கு ஆறவிடவும்
- 5
சுவையான ஆரோக்கியமான பிரண்டை தொக்கு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்