தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)

ஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன்
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
ஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
தினை மாவுடன் கோதுமை மாவு கார்ன்ப்ளார் பால் பவுடர் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும் பின் சர்க்கரையை அளந்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்
- 2
பின் இதை மூன்று முறை ஜலித்து கொள்ளவும் பின் இதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெய் ஊற்றி நன்றாக அழுத்தி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 4
அதில் சிறிது மாவில் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் ஹார்ட் வடிவ பிஸ்கெட் கட்டரை பயன்படுத்தி ஹார்ட் வடிவில் ஷேப் செய்து கொள்ளவும்
- 5
பின் இதை பேக்கிங் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கவர் சுற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும் பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும் பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடமும் 140 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 8 நிமிடமும் வைத்து பேக் செய்யவும்
- 6
சுவையான ஆரோக்கியமான இரண்டு விதமான தினை பிஸ்கெட் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (3)