பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)

பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்ன் நன்றாக சுத்தம் செய்து நீல வாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பேசினில் கடலை மாவு அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு சிறிய அகலமான கடாயில் எண்ணெய் வைத்து கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து ஒன்றொன்றாக போட்டு நன்கு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.
- 4
இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். கடிக்கும் பொழுது தனி சுவையாக இருக்கும்.
- 5
பேபி கார்ன் பஜ்ஜி ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் வைத்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்